டியோபோட்ஸ் 250 அறிமுகம்

Update:2023-09-13 16:03 IST

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் மி.வி. நிறுவனம் புதிதாக டியோபோட்ஸ் ஏ 250 என்ற பெயரில் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 40 மணி நேரம் தொடர்ந்து செயல்படக்கூடியது. இதன் விலை சுமார் ரூ.999. சுற்றுப்புற இரைச்சலை முற்றிலுமாக தவிர்த்துவிடும் நுட்பம் கொண்டது. இதனால் மறுமுனையில் பேசுபவரது குரல் தெளிவாகக் கேட்கும். அதேபோல நீங்கள் பேசுவதும் அவர்களுக்குத் தெளிவாகக் கேட்கும் வகையில் அதிக உணர் திறன் கொண்ட மைக்ரோபோன் உள்ளது. புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது. நீலம், கருப்பு, கிரே, வெள்ளை, புதினா பச்சை போன்ற கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்