இஷான் கிஷன் அரைசதம்: தென் ஆப்பிரிக்காவிற்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா


இஷான் கிஷன் அரைசதம்: தென் ஆப்பிரிக்காவிற்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
x
தினத்தந்தி 9 Jun 2022 3:11 PM GMT (Updated: 9 Jun 2022 3:21 PM GMT)

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், இஷான் கிஷனும் களமிறங்கினர்.

அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் கடந்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 23 ரன்களும், ஸ்ரேயஸ் அய்யர் 36 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் கேப்டன் ரிஷப் பண்ட் 29 ரன்களும் ஹர்திக் பாண்ட்யா 31 ரன்களும் அதிரடியாக குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.


Next Story