ரஷியாவின் பெல்கோரோட் ஒப்லாஸ்டில் குண்டுவெடிப்புகள்... ... லைவ் அப்டேட்ஸ்: எங்கள் நாட்டின் மீது உக்ரைன் ஏவுகணைகளை வீசியது - பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு
Daily Thanthi 2022-07-03 04:39:08.0


ரஷியாவின் பெல்கோரோட் ஒப்லாஸ்டில் குண்டுவெடிப்புகள் நடந்ததாக அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பெல்கோரோட் ஒப்லாஸ்ட் கவர்னர் வியாசெஸ்லாவ் கிளட்கோவ் கூறுகையில், இந்த பகுதியில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. ஒரு குடியிருப்பு கட்டிடம் தீப்பிடித்து எரிந்து வருகிறது. மூன்று பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புகளுக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.


Next Story