உலககோப்பை கால்பந்து: இதுவரை 'கோல்டன் ஷூ' வென்றவர்கள் ,அதிக கோல் அடித்தவர்கள் யார் ? யார் ? - முழு விவரம்...


உலககோப்பை கால்பந்து: இதுவரை கோல்டன் ஷூ  வென்றவர்கள் ,அதிக கோல் அடித்தவர்கள் யார் ? யார் ? - முழு விவரம்...
x

Image Courtesy : AFP 

தினத்தந்தி 17 Nov 2022 6:37 AM GMT (Updated: 2022-11-17T12:21:52+05:30)

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது


தோகா,

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா. உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022 இந்த மாதம் 20ஆம் தேதி கத்தாரில் தொடங்கப்பட உள்ளது.கத்தார் கால்பந்தின் மிகப்பெரிய போட்டியை நடத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாகும்.

இதில் 5 முறை சாம்பியனான பிரேசில், நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, அர்ஜென்டினா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், உருகுவே, பெல்ஜியம் உள்பட 32 அணிகள் களம் இறங்குகின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் என்ற 2-வது சுற்றுக்குள் நுழையும். போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணி, 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12.30 மணி ஆகிய நேரங்களில் நடக்கிறது. 20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார், ஈகுவடாரை (இரவு 9.30 மணி) சந்திக்கிறது. போட்டிகளை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.ஒரு உலகக்கோப்பை போட்டியில் அதிக கோல் அடுத்தவர்களுக்கு கோல்டன் ஷூ (தங்க காலணி ) வழங்கப்டுகிறது.

இந்த நிலையில் இதுவரை உலகக்கோப்பை போட்டியில்கோல்டன் ஷூ , அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியல் பின் வருமாறு ;

கோல்டன் ஷூ வென்றவர்கள்

நடைபெற்ற இடம்

கோல்டன் ஷூ வென்றவர்கள்

நாடு

கோல்

உருகுவே 1930

கில்லர்மோ ஸ்டேபில்

அர்ஜென்டினா

8

இத்தாலி 1934

வோல்ட்ரிச் நெஜெட்லி

செக்கோஸ்லோவாக்கியா

5

பிரான்ஸ் 1938

லியோனிடாஸ்

பிரேசில்

7

பிரேசில் 1950

அடெமிர்

பிரேசில்

8

சுவிட்சர்லாந்து 1954

சாண்டோர் கோசிஸ்

ஹங்கேரி

11

ஸ்வீடன் 1958

ஜஸ்ட் போன்டைன்

பிரான்ஸ்

13

சிலி 1962

கரிஞ்சா, வாவா, லியோனல் சான்செஸ், ஃப்ளோரியன் ஆல்பர்ட், டிராசன் ஜெர்கோவிக், வாலண்டைன் இவானோவ்

பிரேசில், பிரேசில், சிலி, ஹங்கேரி, யூகோஸ்லாவியா, சோவியத் யூனியன்

4

இங்கிலாந்து 1966

யூசிபியோ

போர்ச்சுகல்

9

மெக்சிகோ 1970

கெர்ட் முல்லர்

மேற்கு ஜெர்மனி

10

மேற்கு ஜெர்மனி 1974

கிரேசிகர்ஸ் லக்ட்டா

போலந்து

7

அர்ஜென்டினா 1978

மரியோ கெம்பஸ்

அர்ஜென்டினா

6

ஸ்பெயின் 1982

பாலோ ரோஸி

இத்தாலி

6

மெக்சிகோ 1986

கேரி லினேக்கர்

இங்கிலாந்து

6

இத்தாலி 1990

சால்வடோர் ஷிலாச்சி

இத்தாலி

6

அமெரிக்கா 1994

வோலெக் சலென்கோ, ஹிரிஸ்டோ ஸ்டோய்ச்கோவ்

ரஷ்யா, பல்கேரியா

6

பிரான்ஸ் 1998

டேவர் சுக்கர்

குரோஷியா

6

தென் கொரியா/ஜப்பான் 2002

ரொனால்டோ

பிரேசில்

8

ஜெர்மனி 2006

மிரோஸ்லாவ் க்ளோஸ்

ஜெர்மனி

5

தென்னாப்பிரிக்கா 2010

தாமஸ் முல்லர்

ஜெர்மனி

5

பிரேசில் 2014

சாம்ஸ் ரோட்ரிக்ஸ்

கொலம்பியா

6

ரஷ்யா 2018

ஹாரி கேன்

இங்கிலாந்து

6


இதுவரை உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியல் :


தரவரிசை

வீரர் பெயர்

நாடு

உலகக்கோப்பை கோல்கள்

விளையாடிய போட்டிகள்

உலகக்கோப்பை விளையாடிய ஆண்டுகள்

1

மிரோஸ்லாவ் க்ளோஸ்

ஜெர்மனி

1624

2002, 2006, 2010, 2014

2

ரொனால்டோ

பிரேசில்

1519

1994*, 1998, 2002, 2006

3

கெர்ட் முல்லர்

மேற்கு ஜெர்மனி

1413

1970, 1974

4

ஜஸ்ட் போன்டைன்

பிரான்ஸ்

1361958
5

பீலே

பிரேசில்

1214

1958, 1962, 1966, 1970

6

சாண்டோர் கோசிஸ்

ஹங்கேரி

115

1954

6

ஜூர்கன் கிளின்ஸ்மேன்

மேற்கு ஜெர்மனி/ஜெர்மனி

1117

1990, 1994, 1998

8

ஹெல்முட் ரஹ்ன்

மேற்கு ஜெர்மனி

1010

1954, 1958

8

கேரி லினேக்கர்

இங்கிலாந்து

1012

1986, 1990

8

கேப்ரியல் பாடிஸ்டுடா

அர்ஜென்டினா

1012

1994, 1998, 2002

8

தியோ பிலோ குபிலாஸ்

பெரு

1013

1970, 1978, 1982**

8

தாமஸ் முல்லர்

ஜெர்மனி

1016,20

2010, 2014, 2018**,

8

லக்ட்டா

போலந்து

1020

1974, 1978, 1982Next Story