9 மையங்களில் 1,604 பேர் எழுதினர்


9 மையங்களில் 1,604 பேர் எழுதினர்
x

புதுவையில் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை 9 மையங்களில் 1,604 பேர் எழுதினர்.

புதுச்சேரி

புதுவையில் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை 9 மையங்களில் 1,604 பேர் எழுதினர்.

9 மையங்கள்

மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வுகள் இன்று நாடு முழுவதும் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் புதுச்சேரியிலும் நடந்தது. இதற்காக விவேகானந்தா பள்ளி, பெண்கள் பாலிடெக்னிக், வள்ளலார் அரசு பெண்கள் பள்ளி, பெத்திசெமினார் பள்ளி, இதயா கல்லூரி, இமாகுலேட் பள்ளி ஆகிய இடங்களில் 9 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

1,604 பேர் மட்டுமே எழுதினர்

இந்த தேர்வை எழுத புதுச்சேரியில் 3 ஆயிரத்து 115 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் காலையில் 1,604 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். 1,511 பேர் வரவில்லை. பிற்பகலில் 1,532 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது, 47 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வுகள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நடந்தன. தேர்வு எழுதுவதற்கு வசதியாக தேர்வு மையங்களுக்கு புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Next Story