பொதுமக்களை மிரட்டிய 3 பேர் கைது


பொதுமக்களை மிரட்டிய 3 பேர் கைது
x

புதுவையில் பொதுமக்களை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

முதலியார்பேட்டையில் டிரைவர் ராஜூ என்பவர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில் 100 அடி ரோடு வருங்கால வைப்புநிதி அலுவலகம் அருகே சிலர் கத்தியுடன் நின்றுகொண்டு பொதுமக்களை மிரட்டுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வேல்ராம்பட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 23), அனிதா நகரை சேர்ந்த ராகுல் (21), பிரகாஷ் (21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story