திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருநள்ளாறு

பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வருகிற டிசம்பர் 20-ந்தேதி சனிபெயர்ச்சி விழா நடக்கிறது. அன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வந்த கலெக்டர் குலோத்துங்கன், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் கலெக்டரை வரவேற்று, பக்தர்கள் செல்லும் வரிசை வளாகம், பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை சுட்டிக்காட்டினார்.

அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேப்படுத்தும்படி கலெக்டர் அறிவுறுத்தினார். சனிபெயர்ச்சிக்கு முன்னதாக பக்தர்கள் கூட்டம் வரும் என்பதால், இந்த ஏற்பாட்டை அடுத்த வாரம் முதலே மேற்கொள்ளுமாறு கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார். கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி பசவராஜ் இன்று சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி சாமி தரிசனம் செய்தார்.


Next Story