அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினா்.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில் மதிப்பு ஊதியத்தில் பணிபுரிந்த 27 அங்கன்வாடி ஊழியர்கள், 23 அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பணிநிரந்தரம் ஆணை வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஏற்கனவே அங்கன்வாடியில் உதவியாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஊழியர்களாக பதவி உயர்வு வழங்கக்கோரி அரசு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையே புதுவை மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக அலுவலகத்தில் அங்கன்வாடியில் பணியாற்றும் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காததை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் நேற்று இரவு 9 மணி வரை நீடித்தது. இதில் சங்க தலைவி ராஜலட்சுமி தலைமையில் அங்கன்வாடி உதவியாளர்கள், அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், பிரேமதாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் சாந்தி, சங்க நிர்வாகிகளிடம் போன் மூலமாக ஒரு வார காலத்திற்குள் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதையேற்று காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story