பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் தொடக்கம்


பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் தொடக்கம்
x

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அனைத்து பிரிவு ஊழியர்கள் சங்கம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

பாகூர்

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அனைத்து பிரிவு ஊழியர்கள் சங்கம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதன் பெயர் பலகையை மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். கவுரவ தலைவர் ஜி.கணேசன், மாநிலச் செயலாளர் பத்திரிஸ், கொம்யூன் பஞ்சாயத்து மாநில செயலாளர் செழியன், துணை தலைவர் கந்தவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாகூர் சங்க செயலாளர் வாணிதாசன், தலைவர் மணிகண்டன் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும் இதில் சங்கம் வலுபெற ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சங்கம் போராடும் என்று உறுதியளிக்கப்பட்டது.


Next Story