எங்களை விட்ருங்க சார்...! போலீசார் முன் மண்டியிட்டு கெஞ்சும் பெண்


எங்களை விட்ருங்க சார்...! போலீசார் முன் மண்டியிட்டு கெஞ்சும் பெண்
x

புதுச்சேரி புதிய பஸ்நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பெண் ஒருவர் மண்டியிட்டு, எங்களை விட்ருங்க சார்.. என கெஞ்சும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி

புதுச்சேரி புதிய பஸ்நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பெண் ஒருவர் மண்டியிட்டு, எங்களை விட்ருங்க சார்.. என கெஞ்சும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மண்டியிட்டு கெஞ்சல்

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் 3 போலீசார் நின்று கொண்டு இருந்தனர். அப்போது சேலை உடுத்திய பெண் ஒருவர் மண்டியிட்டு கெஞ்சியுள்ளார். சார்.. எங்களை விட்ருங்க சார்.. எங்களுக்கு எதுவும் தெரியாது என கெஞ்சுகிறார். அருகில் நீலநிற சுடிதார் மற்றும் இளஞ்சிவப்பு நிற டாப் அணிந்த இளம் பெண் ஒருவர் கை கூப்பி நிற்கிறார். போலீசார் அவர்களை, எழுந்திரும்மா.. எழுந்திரும்மா..! இங்கிருந்து முதலில் போங்க என்று கூறுகின்றனர். ஏன், எதற்காக இந்த மண்டியிட்டு கெஞ்சல் என்று தெரியவில்லை.

போலீசார் அங்கிருந்து செல்லுங்கள் என கூறியதும், உடனே அந்த பெண்கள் இருவரும் அங்கிருந்து வேகமாக வெளியேறுவது போன்ற காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விசாரணை நடத்த முயற்சி

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசாரிடம் விசாரித்த போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய பஸ்நிலையத்தில் இரு தரப்பை சேர்ந்த பெண்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே சம்பவத்தன்று புதிய பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சுற்றிக்கொண்டு இருந்த 2 பெண்களை பிடித்து போலீசார், மோதல் வழக்கு தொடர்பாக விசாரிக்க முயன்றனர். அதில் ஒருவர் அந்த மோதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என கூறி பொதுமக்கள் முன்னிலையில் போலீசாரிடம் மண்டியிட்டு கெஞ்சினர்.

இதனை பார்த்த பொதுமக்கள் பலர் தங்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். எனவே போலீசார் அந்த பெண்களை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளது தெரியவந்தது.


Next Story