96 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த மதுரை தம்பதி


96 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்த மதுரை தம்பதி
x

உலக அமைதிக்காக மதுரை தம்பதியினர் 96 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டனர்.

புதுச்சேரி

மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பங்களா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 51). அகில இந்திய காந்திய இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர். இவரது மனைவி சந்திரா (53), மகளிர் பிரிவு செயலாளராக உள்ளார்.

இந்த தம்பதி பல்வேறு பொதுநலத்திற்காக இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளனர்.

இந்த தம்பதியர் பொதுநல பயணத்தை மேற்கொண்ட போது ஏற்பட்ட விபத்தில் சித்ராவின் காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் 3 சக்கர சைக்கிளில் தனது கணவருடன் சேர்ந்து பொது நல யாத்திரையில் பங்கேற்று வருகிறார்.

கருப்பையா சைக்கிளிலும், அவரது மனைவி சித்ரா 3 சக்கர சைக்கிளிலும், தங்கள் பயணம் குறித்த விழிப்புணர்வு பதாகையை பொருத்திக்கொண்டு இன்று புதுச்சேரி வந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 'உலக நாடுகளில் அமைதி, சமாதனம், ஒன்றுமை நிரந்தரமாக நிலவ வேண்டி கோவை மாவட்டத்தை சேர்ந்த போரூரில் இருந்து தங்கள் பயணத்தை ஏப்ரல் மாதம் 12-ந் தேதி தொடங்கினோம். இன்று புதுச்சேரி வந்துள்ளோம். இன்று (வெள்ளிக்கிழமை) ஆரோவில்லில் இந்த பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

இவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்கள் வழியாக சுமார் 96 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story