தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்


தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்
x

புதுவையில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு அலுவலக இயக்குனர் மாணிக்கதீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழிலாளர் துறை வளாகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை தனியார் நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட உள்ளன. என்ஜினீயரிங், டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், ஐ.டி.ஐ. (எலக்ட்ரீசியன், வெல்டர், பிட்டர்) மற்றும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். அவர்கள் தங்களது சுய விவரம் மற்றும் கல்வி தகுதிக்கான உண்மை, நகல் சான்றிதழ்களுடன் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து முகாமில் கலந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story