பூவம் சாராயக்கடை ரூ.29½ லட்சத்திற்கு ஏலம் போனது


பூவம் சாராயக்கடை ரூ.29½ லட்சத்திற்கு ஏலம் போனது
x
தினத்தந்தி 19 Jun 2022 5:37 PM GMT (Updated: 20 Jun 2022 5:16 AM GMT)

காரைக்கால் பூவம் சாராயக்கடை ரூ.29½ லட்சத்திற்கு ஏலம் போனது.

புதுச்சேரி

காரைக்கால் பூவம் சாராயக்கடை ரூ.29½ லட்சத்திற்கு ஏலம் போனது.

சாராயக்கடை

புதுச்சேரி, காரைக்காலில் 103 சாராயக்கடைகளும், 98 கள்ளுக்கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது. இந்த கடைகளுக்கு தற்போது கிஸ்தி தொகையில் 5 சதவீதம் உயர்த்தி ஏலம் விடப்பட்டது.

இதில் 32 சாராயக்கடைகளும், 11 கள்ளுகடைகளும் கிஸ்தி தொகையை உயர்த்தி செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொண்டன. மீதமுள்ள கடைகளுக்கான ஏலம் ஆன்லைன் மூலம் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் 2 நாட்களில் 9 சாராயக்கடைகளும், 9 கள்ளுக்கடைகளும் ஏலம் போனது.

ரூ.29½ லட்சம்

நேற்று முன்தினம் 3-வது நாளாக ஏலம் நடந்தது. இந்த ஏலம் நள்ளிரவு வரை நீடித்தது. இதில் காரைக்கால் பூவம் சாராயக்கடை ரூ.29 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், அத்திபாளையம் கடை ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 354-க்கும் ஏலம் போனது. பூவம் சாராயக்கடையை ஏலம் எடுப்பதில் வியாபாரிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

இதேபோல் அபிஷேகப்பாக்கம் கள்ளுக்கடை ரூ.9 ஆயிரத்து 297-க்கும், டி.என்.பாளையம் கள்ளுக்கடை ரூ.17 ஆயிரத்திற்கும், கரிக்கலாம்பாக்கம் கடை ரூ.20 ஆயிரத்து 450-க்கும் ஏலம் போனது. ஏலம் போகாத கடைகளுக்கு 5 சதவீதம் கிஸ்தி தொகை குறைப்பட்டு நாளை (திங்கட்கிழமை) மீண்டும் ஏலம் நடைபெற உள்ளது.


Next Story