காந்தி வீதியில் வாகனங்கள் செல்ல தடை


காந்தி வீதியில் வாகனங்கள் செல்ல தடை
x

புதுச்சேரியில் சாலை சீரமைக்கும் பணிக்காக காந்தி வீதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

புதுச்சேரி

புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி காந்தி வீதியில் நேருவீதி முதல் ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பு வரை சாலை சீரமைக்கும் பணி நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே அங்கு சாலை பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story