கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

காரைக்காலில் வரிச்சிக்குடி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் தேசிய கால்நடை தொற்று நோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனத்தின் நிதியுதவியுடன், கோட்டுச்சேரி கொம்யூன் வரிச்சிக்குடி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வர் ஜெயசங்கர் முகாமை தொடங்கிவைத்தார். கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் (கால்நடை) டாக்டர் கோபு, கோட்டுச்சேரி கால்நடை மருந்தகத்தின் கால்நடை டாக்டர் கிருத்திகா ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிக்சை அளித்தனர்.

கால்நடைகளை பாதிக்கக்கூடிய நோய்களான குடற்புழு தாக்கம், சத்து குறைபாடு, இனவிருத்தி குறைபாடு, வயிற்றுப்போக்கு, உண்ணி தாக்கம், குறைவான சினை, பால் பிடிக்காமை ஆகியவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முடிவில், நிலையத்தின் உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் அரவிந்த் நன்றி கூறினார்.


Next Story