நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க. பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்
கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
சென்னை,
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில்,நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.தர்மபுரி, சென்னை வடக்கு, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தென்காசி தொகுதிகளுக்கு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிங்காரம் – தர்மபுரி, மாதவரம் மூர்த்தி- சென்னை வடக்கு, நாஞ்சில் வின்சென்ட்-கன்னியாகுமரி, சிட்லபாக்கம் ராஜேந்திரன்- காஞ்சிபுரம், அய்யாதுரை பாண்டியன் – தென்காசி ஆகியோர் அ.தி.மு.க. கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story