சினிமா செய்திகள்

பிறந்தநாளையொட்டி அஜித் வீட்டின் முன்னால் திரண்ட ரசிகர்களால் பரபரப்பு + "||" + Ajith's birthday in front of the house by crowded fans Furore

பிறந்தநாளையொட்டி அஜித் வீட்டின் முன்னால் திரண்ட ரசிகர்களால் பரபரப்பு

பிறந்தநாளையொட்டி அஜித் வீட்டின் முன்னால் திரண்ட ரசிகர்களால் பரபரப்பு
பிறந்தநாளையொட்டி அஜித் வீட்டின் முன்னால் திரண்ட ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

அஜித்குமாருக்கு நேற்று 47-வது வயது பிறந்தது. அவர் பிறந்தநாளை பெரிய விழாவாக கொண்டாடுவது இல்லை. அன்றைய தினம் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விடுவது வழக்கம். நேற்றும் அவர் வீட்டில் இல்லை. ஆனாலும் ரசிகர்கள் திருவான்மியூரில் உள்ள வீட்டின் முன்னால் நள்ளிரவு கூடினார்கள்.


தல அஜித்குமார் வாழ்க என்று கோஷம் போட்டனர். வீட்டின் முன்னால் கேக் வெட்டி இனிப்பு வழங்கினார்கள். ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். நடிகர்-நடிகைகள் பலர் அஜித்குமாருக்கு டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்தார்கள்.

அஜித்குமார் நல்ல ஆரோக்கியத்துடனும் உடல் நலத்துடனும் வாழ ராகவேந்திரா சாமியை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ராகவா லாரன்சும், பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல என்று நடிகர் நிவின்பாலியும் வாழ்த்தினர். தங்கமனம் கொண்ட அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள். உங்களுடையை விஸ்வாசம் படத்துக்கு இசையமைப்பதை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்று இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார்.

டைரக்டர் விக்னேஷ் சிவன், மேலும் 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். “உதவி இயக்குனர் சிறுநீரக சிகிச்சைக்கு அதிக பணம் கொடுத்து உதவிய அஜித்குமார் மீது அதிக மரியாதை வைத்து இருக்கிறேன்” என்று டைரக்டர் சுசீந்திரன் வாழ்த்தினார். உயர்ந்த சிந்தனையும் அழகும் கொண்ட அஜித்குமாரை வாழ்த்துகிறேன் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.

நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், டைரக்டர் வெங்கட் பிரபு ஆகியோரும் டுவிட்டரில் அஜித்தை வாழ்த்தியுள்ளனர்.

அஜித்குமார் 1993-ல் அமராவதி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதுவரை 57 படங்களில் நடித்துள்ளார். அடுத்து சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் தொடங்குகிறது.