அரிவாள்–கம்புகளுடன் கோஷ்டி மோதல் வசந்தபாலன் டைரக்டு செய்த ‘ஜெயில்’ படப்பிடிப்பில் பயங்கரம்


அரிவாள்–கம்புகளுடன் கோஷ்டி மோதல் வசந்தபாலன் டைரக்டு செய்த ‘ஜெயில்’ படப்பிடிப்பில் பயங்கரம்
x
தினத்தந்தி 1 Oct 2018 10:45 PM GMT (Updated: 1 Oct 2018 10:23 AM GMT)

வசந்தபாலன் டைரக்டு செய்து வரும் ‘ஜெயில்’ படப்பிடிப்பு, கோஷ்டி மோதலுகிடையே நடந்தது.

வெயில், அங்காடி தெரு, அரவான், காவிய தலைவன் ஆகிய படங்களை டைரக்டு செய்த வசந்தபாலன் தற்போது, ‘ஜெயில்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில், ஜீ.வி.பிரகாஷ்–அபர்ணதி காதல் ஜோடியாக நடிக்க, சிற்பி மகன் நந்தன்ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா, ரவிமரியா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கபிலன், சினேகன் ஆகிய இருவரும் பாடல்களை எழுத, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாக்யம் ‌ஷங்கர் வசனம் எழுத, கதை–திரைக்கதை–டைரக்‌ஷன்: வசந்தபாலன். ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கண்ணகி நகரில்நடந்தது. பெரும்பகுதி காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. அனைத்து நடிகர்–நடிகைகளும் இணைந்து நடிக்கும் காட்சியை படமாக்கிக்  கொண்டிருந்தபோது, அரிவாள்–கம்புகளுடன் ஒரு கோஷ்டி, இன்னொரு கோஷ்டியை சேர்ந்தவர்களை துரத்த ஆரம்பித்தனர்.

பயந்து போன ஜீ.வி.பிரகாசும், அபர்ணதியும் அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தார்கள். அங்கே இரண்டரை மணி நேரம் நிஜ சண்டை நடந்தது. அது முடிந்தபின், படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினார்கள்.

Next Story