ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள 2.0 திரைப்படத்தின் உருவாக்க காட்சிகள் வெளியீடு..


ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள 2.0 திரைப்படத்தின் உருவாக்க காட்சிகள் வெளியீடு..
x
தினத்தந்தி 2 Oct 2018 12:04 PM IST (Updated: 2 Oct 2018 12:04 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த் - இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ஸ்நீக் பீக் எனப்படும் பிரத்யேக காட்சிகள் இன்று வெளியிடபட்டது.

சென்னை

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.

இந்த படம்  நவம்பர் 29 ந்தேதி  வெளியாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கபட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் உருவாகும் படம் இது.  சுமார் ரூ.543 கோடி செலவில் 2.0 படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

 கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் குறித்த மேக்கிங் வீடியோவை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார். 5 நிமிடம் 43 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் படம் உருவான விதம் குறித்து ஷங்கர், நடிகர் அக்ஷ்ய்குமார், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் பேசியிருந்தனர்.

இதனதை்தொடர்ந்து படத்தின் டீசர் இணையதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் லீக் ஆனது 1.27 நிமிடம் கொண்ட காட்சிகளின் இறுதியில் ரஜினிகாந்த் குக்கூ என கூறுவது போல ஒரு காட்சி இருந்தது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே 2.0 படத்தின் டீசர் இணையத்தில் லீக் ஆனது ஷ்ங்கர் உள்பட அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து படத்தின் டீசரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டீசரை  ரஜினி மற்றும் ஷங்கரின் ரசிகர்கள் உலகளவில் டிரெண்டாக்கினர்.  இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2.O படத்தின் ஸ்நீக் பீக் காட்சிகளை இன்று காலை  வெளியிடபட்டது.



Next Story