சினிமா செய்திகள்

திருமணத்துக்காக இத்தாலி சென்ற தீபிகா படுகோனே + "||" + Deepika Padukone went to Italy for marriage

திருமணத்துக்காக இத்தாலி சென்ற தீபிகா படுகோனே

திருமணத்துக்காக இத்தாலி சென்ற தீபிகா படுகோனே
திருமணத்துக்காக, தீபிகா படுகோனே இத்தாலி சென்றார்.
தமிழில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பத்மாவத் படத்தின் மூலம் மேலும் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. இவரும் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்து வந்தனர். விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்றார்கள். வெளிநாடுகளிலும் சேர்ந்து சுற்றினர்.


ஆனாலும் காதலை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தனர். இப்போது இருவரும் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். சமீபத்தில் தங்கள் திருமண தேதியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அதில், “எங்கள் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தனை ஆண்டுகளாக எங்கள் மீது வைத்த அன்புக்கு நன்றி. எங்கள் வாழ்க்கை பயணம் அன்பாக செல்ல உங்கள் ஆசியை வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அங்குள்ள லேக் கோமோவில் திருமணம் நடக்கிறது. திருமணத்துக்கு முந்தைய சடங்கு நிகழ்ச்சிகள் மும்பையில் உள்ள தீபிகா படுகோனே வீட்டில் நடந்தன. இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் தீபிகா படுகோனேவும் ரன்வீர்சிங்கும் மும்பையில் இருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றனர்.

விமானநிலையத்தில் ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி புறப்பட்டுச் சென்றார்கள். இத்தாலியில் திருமணத்தை முடித்து விட்டு மும்பை திரும்புகிறார்கள். மும்பையிலும் பெங்களூருவிலும் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி மாணவியை திருமணம் செய்து ஏமாற்றிய டிரைவருக்கு 12 ஆண்டு சிறை - கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
பள்ளி மாணவியை திருமணம் செய்து ஏமாற்றிய டிரைவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-
2. எல்லையில் தொடரும் பதற்றம்; இந்திய மணமகன், பாகிஸ்தானிய மணமகள் இடையேயான திருமணம் ரத்து
எல்லையில் தொடரும் பதற்ற நிலையால் இந்திய மணமகனுக்கும் பாகிஸ்தானிய மணமகளுக்கும் இடையே நடக்க இருந்த திருமணம் நின்று போனது.
3. திருமணம்
சேரன் இயக்கத்தில் உமாபதி ராமையா - காவ்யா சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `திருமணம்' படத்தின் சினிமா விமர்சனம்.
4. திருமணம்
சேரன் இயக்கத்தில் உமாபதி ராமையா - காவ்யா சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `திருமணம்' படத்தின் முன்னோட்டம்.
5. திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்: விதவை மீது ‘ஆசிட்’ வீசி விட்டு கள்ளக்காதலன் தற்கொலை - திருவட்டார் அருகே பரபரப்பு
திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன், விதவை மீது ஆசிட் வீசி விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...