சினிமா செய்திகள்

ரஜினியின் “பேட்ட”, அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படங்கள் வெளியானது -ரசிகர்கள் கொண்டாட்டம் + "||" + Rajinikanth's "Petta" and Ajith's "Visheasam" movies were released - the celebration of the fans

ரஜினியின் “பேட்ட”, அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படங்கள் வெளியானது -ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினியின் “பேட்ட”, அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படங்கள் வெளியானது -ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினியின் “பேட்ட”, அஜித்தின் “விஸ்வாசம்” திரைப்படங்கள் இன்று வெளியாகி உள்ளன. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை, 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. இதில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, யோகி பாபு, சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று வெளியானது. 

இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் மாஸாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் ரசிகர் இப்படத்தை காண திரண்டு வருகின்றனர்.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் இன்று வெளியானது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4வது முறையாக இணைந்து அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும் யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனை ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடினர். கடந்தாண்டு அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், இன்று வெளியான இப்படத்தை காண ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினியின் தர்பாரில் புதிய வில்லன்
ரஜினியின் தர்பாரில் புதிய வில்லன் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. பரபரப்பான கோர்ட்டு காட்சியில் நீளமான வசனத்தை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார்
‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நீளமான வசனங்களை அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி நடித்தார்.
3. தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்: கமல்ஹாசன்
ரஜினியிடம் பேசும்போது ஆதரவு தருவதாக சொன்னார், ஆதரவு தரக் கோரி மீண்டும் மீண்டும் வலியுறுத்த முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
4. மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்?
மீண்டும் டைரக்டர் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. விஜய், அஜித், சித்தார்த்தின் துப்பாக்கி, வேதாளம், பாய்ஸ் 2-ம் பாகங்கள்
விஜய்யின் துப்பாக்கி, அஜித்தின் வேதாளம், சித்தார்த்தின் பாய்ஸ் ஆகிய படங்களின் 2-ம் பாகங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.