‘தி பேட்மேன்’ படம் 2021–ல் வெளியாகிறது


‘தி  பேட்மேன்’ படம் 2021–ல் வெளியாகிறது
x
தினத்தந்தி 1 Feb 2019 9:30 PM GMT (Updated: 1 Feb 2019 6:44 PM GMT)

பேட்மேன் படம் 2021–ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

‘பேட்மேன்’ சூப்பர் ஹீரோ படத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1945–ல் இருந்து இதுவரை 10–க்கும் மேற்பட்ட பேட்மேன் படங்கள் வந்துள்ளன. அனைத்துமே நல்ல வசூல் குவித்துள்ளன. அடுத்த பேட்மேன் படம் 2021–ம் ஆண்டு ஜூன் மாதம் 25–ந் தேதி வெளியாகும் என்று  படக்குழுவினர் தற்போது அறிவித்து உள்ளனர். 

பிரபல ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பரோஸ் தயாரிக்கும் புதிய பேட்மேன் படத்தை மேட் ரீவ்ஸ் டைரக்டு செய்கிறார். ஜஸ்டீஸ் லீக் மற்றும் பேட்மேன்–சூப்பர்மேன் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள பென் அப்லெக் இந்த படத்தில் பேட் மேனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

ஆனால் இதில் அவர் நடிக்கவில்லை. எனவே பேட்மேன் கதாபாத்திரத்துக்கு நடிகர் தேர்வு நடக்கிறது. புதிய பேட்மேன் யார் என்ற எதிர்பார்ப்பில் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பேட்மேன் கதாபாத்திரத்தை இளமையாக உருவாக்க இருப்பதாகவும் எனவே இளம் நடிகர் ஒருவர் இதில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

வார்னர் பிரோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘சுயிசைட் ஸ்குவாட்’ படத்தையும் 2021–ல் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story