திருநங்கையாக நடித்தவர் தேசிய விருது போட்டியில் ஸ்ரீபல்லவி


திருநங்கையாக நடித்தவர் தேசிய விருது போட்டியில் ஸ்ரீபல்லவி
x
தினத்தந்தி 14 April 2019 10:50 PM GMT (Updated: 14 April 2019 10:50 PM GMT)

தமிழ் படங்களில் திருநங்கை கதாபாத்திரங்களில் பலர் நடித்து பாராட்டு பெற்றுள்ளனர். காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் திரைக்கு வந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக வந்தார். அவரது தோற்றமும் ரசிகர்களை கவர்ந்தது.

இதுபோல் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் ஆனந்த பாண்டி ஆகியோர் நடித்து திரைக்கு வந்த தாதா 87 படத்தில் ஸ்ரீபல்லவி திருநங்கையாக நடித்து இருந்தார். பொதுவாக திருநங்கை வேடங்களில் நடிகர்கள் நடித்து வரும் நிலையில் இமேஜ் பார்க்காமல் ஸ்ரீபல்லவி இந்த கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து படக்குழுவினரை வியக்க வைத்தார்.

அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும் கிடைத்தன. திருநங்கைகளை பெண் என்று அழைப்போம் என்ற கருத்தை பதிவு செய்யும் படமாக இதை இயக்குனர் உருவாக்கி இருந்தார்.

இந்த நிலையில் திருநங்கையாக நடித்து பாராட்டு பெற்ற ஸ்ரீபல்லவி 2018-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் ‘தாதா 87’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Next Story