மீண்டும் திகில் படத்தில், ஹன்சிகா


மீண்டும் திகில் படத்தில், ஹன்சிகா
x
தினத்தந்தி 17 May 2019 10:00 PM GMT (Updated: 17 May 2019 5:15 PM GMT)

மீண்டும் ஒரு திகில் படத்தில் ஹன்சிகா ஒப்பந்தமாகி உள்ளார்.

நடிகைகள் திகில் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நயன்தாரா மாயா, ஐரா ஆகிய பேய் படங்களில் நடித்தார். இரண்டிலுமே அவர் பேயாகவும் வந்தார். திரிஷா மோகினி, அரண்மனை-2 ஆகிய 2 பேய் படங்களில் நடித்து இருந்தார். இவற்றில் பேயாகவும் மிரட்டினார். அனுஷ்கா அருந்ததி, பாக்மதி ஆகிய திகில் படங்களில் நடித்துள்ளார்.

தமன்னாவும் தேவி திகில் படத்தில் நடித்து இருந்தார். இதன் இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நடிகை ஹன்சிகா ஏற்கனவே அரண்மனை-2 பேய் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது அவரது 50-வது படமான மஹாவும் திகில் கதையாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்த படத்தில் ஹன்சிகாவின் தோற்றத்தை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டு சர்ச்சையானது. படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இன்னொரு திகில் படத்திலும் ஹன்சிகா ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் டைரக்டு செய்கிறார். இதில் ஹன்சிகா வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பும் மாடர்ன் பெண்ணாக நடிப்பதாகவும் அவரது தோற்றம் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். படப்பிடிப்பை அடுத்த மாதம் (ஜூன்) தொடங்க உள்ளனர்.

Next Story