சினிமா செய்திகள்

மகள் வயது நடிகையுடன் முத்த காட்சி: சர்ச்சையில் சிக்கிய நாகார்ஜுனா + "||" + Kiss Scene with daughter age actress: Nagarjuna was mired in controversy

மகள் வயது நடிகையுடன் முத்த காட்சி: சர்ச்சையில் சிக்கிய நாகார்ஜுனா

மகள் வயது நடிகையுடன் முத்த காட்சி: சர்ச்சையில் சிக்கிய நாகார்ஜுனா
மகள் வயது நடிகையுடன் முத்த காட்சியில் நடித்து நடிகர் நாகார்ஜுனா சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவருக்கு 59 வயது ஆகிறது. தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘மன்மதடு-2’ படத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகிளாக ரகுல்பிரீத் சிங், அக்‌ஷரா கவுடா நடிக்கின்றனர்.


இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டிரெய்லரில் ஒரு பெண்ணுக்கு நாகார்ஜுனா உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுப்பதுபோன்ற காட்சி இடம்பெற்று உள்ளது. அந்த நடிகையின் முகம் தெரியவில்லை. அவர் யாருக்கு முத்தம் கொடுக்கிறார்? ரகுல்பிரீத் சிங்குக்கா? அல்லது அக்‌ஷராவுக்கா என்று வலைத்தளத்தில் சிலர் கேள்வி எழுப்பினர்.

இன்னும் பலர் மகள் வயது பெண்ணுடன் முத்த காட்சியில் நடிக்கலாமா? இந்த வயதில் முத்த காட்சி தேவையா என்று கோபத்தில் கண்டித்து வருகிறார்கள். முத்த காட்சி வீடியோவும் நாகார்ஜுனாவை கண்டிக்கும் விவாதமும் வலைத்தளத்தில் வைராகி உள்ளது. இந்த நிலையில் டைரக்டர் ராகுல் ரவீந்திரன் மனைவியும் பாடகியுமான சின்மயியையும் சிலர் கண்டித்துள்ளனர்.

வயதான நடிகர்கள் மகள் வயது நடிகைகளுடன் ஜோடியாக நடிப்பதை சின்மயி ஏற்கனவே விமர்சித்து இருந்தார். அதை நினைவுபடுத்தி உங்கள் கணவர் வயதான நடிகரையும் மகள் வயது நடிகையையும் முத்த காட்சியில் நடிக்க வைத்துள்ளாரே? இதை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.