சினிமா செய்திகள்

விஜய்யை அரசியலுக்கு அழைத்து ‘போஸ்டர்’ + "||" + To vijay, Call politics 'Poster'

விஜய்யை அரசியலுக்கு அழைத்து ‘போஸ்டர்’

விஜய்யை அரசியலுக்கு அழைத்து ‘போஸ்டர்’
நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினிகாந்த், கமல்ஹாசனை அடுத்து விஜய்யின் அரசியல் பிரவேசமும் எதிர்பார்ப்பில் உள்ளது. 1992-ல் நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய் இப்போது பிரபல நாயகனாக உயர்ந்து இருக்கிறார். இவரது படங்கள் உலக அளவில் நல்ல வசூலை அள்ளுகின்றன. கேரளா, ஆந்திராவிலும் பெரிய மார்க்கெட் உள்ளது.

வலுவான ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பிருந்தே விஜய் நடவடிக்கைகளில் அரசியல் இருப்பதாக கருதப்பட்டது. 2008-ல் ரசிகர் மன்றத்தை திடீரென்று விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதற்கு தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்தார். இளைஞர் அணி, மாணவர் அணி என்று அரசியல் கட்சிக்கு இணையாக அமைப்புகளை உருவாக்கினார். மாநில-மாவட்ட பொறுப்புகளில் இருந்து ஒன்றிய நகர பூத் கமிட்டி வரை நிர்வாகிகளை நியமனம் செய்து அரசியல் கட்சிக்கு இணையாக அமைப்பை வலுப்படுத்தி வைத்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் எப்போது வேண்டுமானாலும் அரசியல் கட்சியாக மாறலாம் என்கின்றனர். விஜய்யின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

“விரைவில் இருக்குமா மதுரையில் மாநாடு. காத்திருக்கிறது ஒட்டுமொத்த தமிழ்நாடு, மக்களை காப்பாற்ற வா தலைவா, இன்று தமிழக அரசியலில் பெரிய ஓட்டை. நாளை உங்களுக்காக காத்திருக்கு தமிழகத்தின் கோட்டை, தளபதிக்கு அரசியலில் இறங்க தயக்கமில்லை. இறங்கினால் வேறு எந்த கட்சிக்குமே இடமில்லை” என்பன போன்ற வாசகங்கள் சுவரொட்டிகளில் இடம்பெற்று உள்ளன. இந்த போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.


தொடர்புடைய செய்திகள்

1. “விஜய்யை வைத்து மீண்டும் படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி”
விஜய் நடித்த ‘செந்தூர பாண்டி,’ ‘ரசிகன்,’ ‘தேவா’ ஆகிய மூன்று படங்களை தயாரித்தவர், எஸ்.சேவியர் பிரிட்டோ. இவர், விஜய்யின் நெருங்கிய உறவினர் ஆவார்.
2. பிகில் படக்குழுவினர் 400 பேருக்கு நடிகர் விஜய் மோதிரம் பரிசு
‘பிகில்’ படத்தில் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் விஜய் நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக வருகிறார். விவேக், டேனியல் பாலாஜி, கதிர், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
3. இதுவரை இல்லாத வியாபாரம்!
விஜய்யை வைத்து அட்லீ டைரக்டு செய்த ‘தெறி,’ ‘மெர்சல்’ ஆகிய 2 படங்களும் வெற்றி பெற்றதுடன், வசூல் சாதனையும் செய்தன.
4. அடுத்த கட்டத்திற்கு சென்ற விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல் அஜித் ரசிகருக்கு கத்தி வெட்டு
சென்னை புழல் அகதிகள் முகாமில், நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறி ஒருவரைக் கத்தியால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
5. பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதில் விஜய் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.