`வானம் கொட்டட்டும்' குடும்ப உறவுகளை பேசும் படம்!


`வானம் கொட்டட்டும் குடும்ப உறவுகளை பேசும் படம்!
x
தினத்தந்தி 14 Nov 2019 10:30 PM GMT (Updated: 14 Nov 2019 10:08 AM GMT)

டைரக்டர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் புதிய படம், ‘வானம் கொட்டட்டும்.’ இந்த படத்தில் விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். தனா டைரக்டு செய்கிறார்.

‘வானம் கொட்டட்டும்’ படத்தை பற்றி டைரக்டர் தனா சொல்கிறார்:-

‘‘அலைபாயுதே படத்தில் கணவன்-மனைவி உறவை பற்றி மணிரத்னம் ஆழமாக சொல்லியிருப்பார். அதேபோல் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில், இந்த காலகட்டத்துக்கு ஏற்ப கதை இருக்கும். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும். மணிரத்னத்தின் சொந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்தாலும், எதைப்பற்றியும் என்னிடம் அவர் கேட்கவில்லை. எந்த ஆலோசனையும் சொல்லவில்லை.

இளைஞர்களை கவர்ந்த பாடகர் சித் ஸ்ரீராம், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக உயர்ந்து இருக்கிறார். திருநெல்வேலி, குற்றாலம் உள்பட பல இடங்களுக்கு சென்று படப் பிடிப்பை நடத்தி இருக்கிறோம். பெரிய பட்ஜெட் படமாக இது உருவாகி இருக்கிறது.’’

Next Story