சினிமா செய்திகள்

இருட்டு, ஆயிரம் ஜென்மங்கள்திரைக்கு வரும் 2 பேய் படங்கள் + "||" + 2 ghost films that come on screen

இருட்டு, ஆயிரம் ஜென்மங்கள்திரைக்கு வரும் 2 பேய் படங்கள்

இருட்டு, ஆயிரம் ஜென்மங்கள்திரைக்கு வரும் 2 பேய் படங்கள்
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேய் படங்களுக்கு மவுசு உள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த பேய் கதைகள் அனைத்துமே நல்ல வசூல் பார்த்துள்ளன.
இயக்குனர் சுந்தர்.சி ஏற்கனவே அரண்மனை பேய் படத்தை வெளியிட்டு லாபம் பார்த்தார். அதற்கு கிடைத்த வரவேற்பால் அரண்மனை 2-ம் பாகமும் எடுத்தார்.

தற்போது இருட்டு என்ற இன்னொரு பேய் கதையில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை வி.இசட்.துரை இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பை முடித்து கடந்த மாதம் 11-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால் படம் வெளியாகவில்லை. தற்போது அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருட்டு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இதில் சாய்தன்ஷிகா, விமலாராமன், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இதுபோல் ஆயிரம் ஜென்மங்கள் என்ற இன்னொரு பேய் படமும் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், நிகிஷா படேல், இஷா ரெப்பா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். எழில் இயக்கி உள்ளார். ரமேஷ் பி.பிள்ளை தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாசும் பேயாக நடிக்கிறார். 1978-ல் இதே ஆயிரம் ஜென்மங்கள் என்ற பெயரில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பேய் படமும் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.