என்னை ஏமாற்றி விட்டார் டைரக்டரை சாடிய ஸ்ரீரெட்டி


என்னை ஏமாற்றி விட்டார் டைரக்டரை சாடிய ஸ்ரீரெட்டி
x
தினத்தந்தி 2 Jan 2020 3:30 AM IST (Updated: 2 Jan 2020 2:28 AM IST)
t-max-icont-min-icon

பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா தன்னை ஏமாற்றி விட்டதாக ஸ்ரீரெட்டி சாடி உள்ளார்.

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ஐதராபாத்தை விட்டு வெளியேறி சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ரெட்டி டைரி என்ற பெயரில் படம் தயாராகிறது. இதில் நடிக்கவும் செய்கிறார். ராகவா லாரன்சும் தனது படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளார்.

சமீப நாட்களாக அமைதியாக இருந்த அவர் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னார். அவர் கூறும்போது, “பெண்களை மதிக்க தெரியாதவர் பவன் கல்யாண். பல இளம் பெண்களை மோசம் செய்துள்ளார். வாழ்க்கையில் அவரால் உயர முடியாது என்றார்.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா தன்னை ஏமாற்றி விட்டதாக ஸ்ரீரெட்டி சாடி உள்ளார். தனது முகநூல் பக்கத்தில், “ராம்கோபால் வர்மா என்னை பார்த்து நான் உனது காலை தொட்டேன். நீ ஒரு தேவதை என்றார். ஆனால் இப்போது என்னை அவர் ஏமாற்றி விட்டு இன்னொரு பெண்ணின் காலை தொட்டு கொண்டு இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராம்கோபால் வர்மா சமீபத்தில், நான் இறந்த பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கல்லறை அருகில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

Next Story