சினிமா செய்திகள்

எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அரவிந்த சாமி நடிக்கும் 'தலைவி' பட டீசர் + "||" + Arvind Swami As MGR First Look Thalaivi Teaser |

எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அரவிந்த சாமி நடிக்கும் 'தலைவி' பட டீசர்

எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அரவிந்த சாமி நடிக்கும் 'தலைவி' பட டீசர்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தலைவி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
சென்னை

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில்  ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். படத்தில் நடிகர் அரவிந்த சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து வருகிறார். பிரகாஷ்ராஜ் கருணாநிதியாகவும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவாக பிரியாமணி நடிக்கின்றனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும்  உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

எம்.ஜி.ஆர் பிறந்த நாளான இன்று தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த சாமியின் தோற்றத்தை அரவிந்த சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது தலைவி படத்தில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்று எம்.ஜி.ஆர். பாடலில் நடிகர் அரவிந்த சாமி பாடி நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.தொடர்புடைய செய்திகள்

1. வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்?
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
2. இனி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே படப்பிடிப்பு தளங்களோடு ஒப்பந்தம் - பெப்சி தீர்மானம்
படப்பிடிப்பு தளத்தினர் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் போட்ட பின்னரே இனி பணியாளர்கள் தொழில் செய்ய முன்வருவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கூறினார்.
3. 24 மணி நேரத்தில் விஜயின் குட்டி கதை பாடலுக்கு "90 லட்சம் பார்வைகள் 10 லட்சம் லைக்குகள் "
24 மணி நேரத்தில் விஜயின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல் பெற்ற பார்வைகள் மற்றும் லைக்குகள் விவரத்தை சோனி நிறுவனம் அறிவித்து உள்ளது.
4. தமிழ் சினிமா சிறிய பிரச்சினையில் இருந்து பெரிய பிரச்சினை நோக்கி செல்கிறது-ஆர்.கே.செல்வமணி
தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது என்று, பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
5. நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.