சினிமா செய்திகள்

‘சின்னத்திரை’ நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்: விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேருகிறார், வாணிபோஜன்! + "||" + Good luck to the TV Serial heroine: Vani Bojan joins hands with Vikram Prabhu

‘சின்னத்திரை’ நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்: விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேருகிறார், வாணிபோஜன்!

‘சின்னத்திரை’ நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்: விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேருகிறார், வாணிபோஜன்!
‘சின்னத்திரை’ நாயகியான வாணிபோஜன், விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர உள்ளார்.

‘தெய்வ மகள்’ என்ற ‘சின்னத்திரை’ தொடரில் கதாநாயகியாக நடித்தவர், வாணிபோஜன். அந்த தொடரில் அவர், ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர், ஊட்டியை சேர்ந்தவர். ஒரே ஒரு தொடரில்தான் அவர் நடித்து இருக்கிறார். அந்த ஒரு தொடரிலேயே பிரபலமாகி விட்டார்.

எல்லா வீடுகளிலும் ‘சத்யா’ கதாபாத்திரம் பேசப்பட்டது. ‘சத்யா’வை தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதினார்கள். அவருக்கு ‘தெய்வ மகள்’ தொடர் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. அதுவே அவருக்கு ‘பெரிய திரை’யில் நடிக்கும் வாய்ப்பையும் வாங்கி கொடுத்துள்ளது.

விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த படத்தை ஒரு தெலுங்கு டைரக்டர் இயக்குகிறார்.

நிதின் சத்யா தயாரிப்பில், வைபவ் கதாநாயகனாகவும், வெங்கட்பிரபு வில்லனாகவும் நடிக்கும் ‘லாக்கப்’ என்ற படத்திலும் வாணிபோஜன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திலும் இவர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் இயக்குகிறார். விதார்த் தயாரித்து நடிக்கும் படம், கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் நடிக்கும் திகில் படம் ஆகிய படங்களிலும் வாணிபோஜன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

தென்னிந்திய பிரபல கதாநாயகிகளுக்கு வாணிபோஜன் சரியான போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த அரியலூர் காதல் ஜோடி தர்ணா
ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த அரியலூர் காதல் ஜோடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.