“எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்” ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்


“எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்” ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 Jun 2020 10:30 PM GMT (Updated: 11 Jun 2020 8:45 PM GMT)

நடிகர் விஜய்க்கு வருகிற 22ந்தேதி பிறந்த நாள் ஆகும்.

சென்னை,

நடிகர் விஜய்க்கு வருகிற 22ந்தேதி பிறந்த நாள் ஆகும். அனைத்து மாவட்டங்களிலும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்து வருகிறார்கள். விஜய் உருவப்பட பேனர்கள் வைத்தல், கொடி தோரணங்கள் கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட உள்ளனர். ஏழைகளுக்கு உதவி பொருட்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இது பற்றிய தகவல் நடிகர் விஜய்க்கு வந்தது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் உள்ள இந்த நேரத்தில் ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் கூடி பிறந்த நாளை கொண்டாடுவதன் மூலம் நோய் தொற்று பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்திடம் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்யும்படி அறிவுறுத்தினார்.

இதையடுத்து அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுக்கும் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தொலைபேசி மூலமாக தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரசிகர்களின் வங்கி கணக்கில் விஜய் பணம் செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story