சினிமா செய்திகள்

படக்குழுவினரை பாதுகாக்க ரூ.3 ஆயிரம் கோடி! + "||" + 3 thousand crore to spend protect Film Crew from Corona virus

படக்குழுவினரை பாதுகாக்க ரூ.3 ஆயிரம் கோடி!

படக்குழுவினரை பாதுகாக்க ரூ.3 ஆயிரம் கோடி!
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் இருந்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் இருந்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதிக உயிரிழப்புகளை சந்தித்த அமெரிக்காவில் இப்போது இறப்பு சதவீதம் குறைந்து வருகிறது.

அதைத்தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படப்பிடிப்புகளை தொடர்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்து இருக்கிறார்கள். சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய ‘ஜுராசிக் பார்க்‘ படத்தின் 6-ம் பாக படப்பிடிப்பு கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தொடங்க இருந்தது. கொரோனா காரணமாக இந்த படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டது.

இப்போது அந்த படப்பிடிப்பை அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி தொடங்குவது என்று தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து, ‘அவதார் 2,’ ‘ஜுராசிக் வேல்ட் டொமினியன்’ ஆகிய படப்பிடிப்புகளும் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.

படப்பிடிப்பு குழுவினரின் பாதுகாப்புக்காக மட்டும் ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சீனா அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது -அமெரிக்காவின் உயர்மட்ட குழு சொல்கிறது
20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சீனா அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என அமெரிக்காவின் உயர்மட்ட குழு ஒன்று தெரிவித்து உள்ளது.
2. பைசர் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல்: அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது
பிரிட்டன் அரசு ஒப்புதலை தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
3. கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆராய எல்லாவற்றையும் செய்வோம்: உலக சுகாதார அமைப்பின் தலைவர்
கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆராய எல்லாவற்றையும் செய்வோம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6.19 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6.19 கோடியாக உயர்ந்துள்ளது.
5. தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை : டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.