சினிமா செய்திகள்

ஏரியில் படகு சவாரி சென்ற ஹாலிவுட் நடிகை பிணமாக மீட்பு + "||" + The body of a Hollywood actress who went for a boat ride on the lake has been recovered

ஏரியில் படகு சவாரி சென்ற ஹாலிவுட் நடிகை பிணமாக மீட்பு

ஏரியில் படகு சவாரி சென்ற ஹாலிவுட் நடிகை பிணமாக மீட்பு
பிரபல ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா. இவர் மாஸ்டர் ஆப் டிஸ்கியூஸ், மேட் பேமிலிஸ், க்ள, பிரான்கன் ஷூட், அட் த டெவில் டோர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். 33 வயது ஆகிறது.
கோபே சான் லூகாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து 2 வருடங்களுக்கு பிறகு விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு ஜோஸி ஹாலிஸ் என்ற 4 வயது ஆண் குழந்தை உள்ளது.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த நயா ரிவேரா சில தினங்களுக்கு முன்பு தனது மகனுடன் கலிபோர்னியாவில் உள்ள பிரு ஏரியில் ஒரு படகை வாடகைக்கு எடுத்து சவாரி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கரைக்கு திரும்பவில்லை.

ரிவேரா சென்ற படகு ஏரியின் நடுப்பகுதியில் நின்று கொண்டு இருந்தது. ரிவேரா படகில் இல்லை. அவரது மகன் மட்டும் தூங்கிகொண்டு இருந்தான். மாயமான ரிவேராவை நீச்சல் வீரர்கள் ஏரியில் குதித்து தேடினர். ஹெலிகாப்டரிலும் தேடினார்கள்.

இந்த நிலையில் 6 நாட்களுக்கு பிறகு நயா ரிவேரா பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். அவரது உடல் மீட்கப்பட்ட பகுதியில் ஏரியின் ஆழம் 35 அடி முதல் 60 அடி இருந்தது. தண்ணீரில் குதித்து நீந்திய நயா ரிவேரா படகில் ஏற முடியாமல் நீரில் இழுத்து செல்லப்பட்டு இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ரிவேரா மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.