சினிமா செய்திகள்

22 கிலோ எடையை குறைத்தார், வருண் + "||" + Weight loss of 22 kg, Varun

22 கிலோ எடையை குறைத்தார், வருண்

22 கிலோ எடையை குறைத்தார், வருண்
‘ஒருநாள் இரவில்...’ படத்தில் ஆட்டோ டிரைவராக அறிமுகமானவர், வருண்.
‘ஒருநாள் இரவில்...’ படத்தில் ஆட்டோ டிரைவராக அறிமுகமானவர், வருண். தொடர்ந்து, ‘போகன்,’ ‘வனமகன்,’ ‘நெருப்புடா,’ ‘சீறு’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது, ‘ஜோஷ்வா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


இது, கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்டு செய்யும் படம். படத்துக்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று வருணிடம், கவுதம் வாசுதேவ் மேனன் கேட்டுக்கொண்டார்.

டைரக்டரின் அறிவுரைப்படி, கதாநாயகன் வருண் உடல் எடையில் 22 கிலோ குறைத்து, ஒல்லியான தோற்றத்துக்கு மாறியிருக்கிறார்.

ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டதும், ‘ஜோஷ்வா’ படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

“கதாநாயகன், வில்லன் என்று வேறுபாடு பார்க்காமல், தரமான கதையும், சிறந்த கதாபாத்திரமும் உள்ள படங்களில் நடிப்பேன்” என்கிறார், வருண்.