சினிமா செய்திகள்

நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்கு கொரோனா + "||" + Corona to actress Sharmila Mandre

நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்கு கொரோனா

நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்கு கொரோனா
நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

நாடு முழுவதும் ஊரடங்கையும் மீறி கொரோனா வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள். தற்போது பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் தமிழில் வினய், சந்தானத்துடன் மிரட்டல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். விமல் ஆஸ்னா சவேரி நடித்து திரைக்கு வந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தை தயாரித்து இருந்தார்.


தற்போது ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா நடிக்கும் சண்டக்காரி, அட்டகத்தி தினேஷ், தீப்தி நடிக்கும் நானும் சிங்கிள்தான் ஆகிய தமிழ் படங்களையும் தயாரித்து வருகிறார். பெங்களூருவை சேர்ந்த இவர் கன்னடத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். ஷர்மிளா மந்த்ரே தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அனைவருக்கும் லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். நான் மருத்துவர் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; இன்று 96 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. இந்தியாவில் இன்று 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் புதிதாக 15,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. புதுச்சேரியில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று 16 பேருக்கு தொற்று உறுதி
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
5. இந்தியாவில் இன்று 15,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் புதிதாக 15,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.