சினிமா செய்திகள்

‘விக்ரம்' படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கமல் + "||" + Kamal plays a police officer role in Vikram

‘விக்ரம்' படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கமல்

‘விக்ரம்' படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கமல்
தேர்தல் பணிகளை முடித்துள்ள கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர்.கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்தது. ஆனால் அண்ணாத்த படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைத்துள்ளனர். இதில் மலையாள நடிகர் பகத் பாசிலை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். பகத் பாசில் வில்லனாக நடிப்பாரா அல்லது வேறு கதாபாத்திரமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 2006-ல் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். அதன் பிறகு வெளியான தூங்காவனம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக வந்தார். ஆனால் அதில் போலீஸ் சீருடை அணியவில்லை. விக்ரம் படத்தில் போலீஸ் சீருடையுடன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வீரமே வாகையைச் சூடும்...வெளியானது கமலின் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக்...!
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய மூன்று பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
2. விக்ரமின் ‘கோப்ரா' ஓ.டி.டி.யில் ரிலீசா?
கொரோனாவால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் புதிய படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
3. நீண்ட தூரம் நடந்துசென்று ஓட்டு போட்ட நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை ஓட்டு போட கிளம்பினார். காரை தவிர்த்து விட்டு ஒன்றே கால் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வேளச்சேரிக்கு உட்பட்ட தியோசப்பிக்கல் பள்ளி வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்றார்.