கமலின் புதிய படம்


கமலின் புதிய படம்
x
தினத்தந்தி 4 Oct 2021 11:10 AM GMT (Updated: 4 Oct 2021 11:10 AM GMT)

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்கு பிறகு அவர் நடிக்கும் புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் விக்ரம் படத்தை முடித்து விட்டு வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிப்பதை நடிகை ஸ்ரீப்ரியா தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். 

பாபநாசம் 2-ம் பாகத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு நேரம் இல்லை. விக்ரம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களில் அவர் நடிக்க உள்ளார் என்று ஸ்ரீப்ரியா கூறியுள்ளார். சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை வெற்றி மாறன் இயக்குகிறார். அந்த படத்தை முடித்து விட்டு கமல்ஹாசன் படத்தை இயக்க இருக்கிறார். 

கமல்ஹாசன் ஏற்கனவே நடித்து வந்த இந்தியன்-2 படம் கோர்ட்டு வழக்கில் சிக்கியது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story