மாநாடு திரைப்படத்திற்கு டைரக்டர் சங்கர் பாராட்டு..!


மாநாடு திரைப்படத்திற்கு டைரக்டர் சங்கர் பாராட்டு..!
x
தினத்தந்தி 6 Dec 2021 5:00 PM IST (Updated: 6 Dec 2021 5:00 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்திற்கு டைரக்டர் சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாநாடு'.

டைம்லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் இந்த திரைப்படம் நடிகர் சிம்புவிற்கு சிறந்த 'கம் பேக்' (Come Back) படமாக அமைந்தது.

இந்த நிலையில் டைரக்டர் சங்கர், மாநாடு திரைப்படத்தைப் பாராட்டி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், 'மாநாடு திரைப்படத்தை வெங்கட்பிரபு புத்திசாலித்தனமாக எழுதி இயக்கியுள்ளார். சிலம்பரசன் அதிரடி காட்டியுள்ளார். எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு அற்புதமாக இருந்தது. யுவனின் இசை படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது.

மேலும், படத்தின் பிற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தங்களுடைய சிறப்பைக் கொடுத்துள்ளனர். டைம்லூப் கதை அருமையாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. தமிழ் சினிமாவிற்கு இந்த திரைப்படம் பொழுதுபோக்கு மற்றும் புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது' என்று கூறியுள்ளார்.

Next Story