'கேப்டன் மில்லர்' படத்தின் 3-வது பாடல் வெளியீடு


கேப்டன் மில்லர் படத்தின் 3-வது பாடல் வெளியீடு
x
தினத்தந்தி 2 Jan 2024 1:32 PM GMT (Updated: 5 Jan 2024 1:30 PM GMT)

'கேப்டன் மில்லர்' படத்தில் இருந்து 'கோரனாரு' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தின் டீசரை தனுஷின் பிறந்த நாளன்று படக்குழு வெளியிட்டிருந்தது. தொடர்ந்து 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் 'கில்லர் கில்லர்' மற்றும் 'உன் ஒளியிலே' ஆகிய இரண்டு பாடல்களை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து இன்று இந்த படத்தின் 3-வது பாடலான 'கோரனாரு' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.



Next Story