நடிகர் பாலா 2-வது மனைவியை பிரிந்தாரா?
நடிகர் பாலா 2-வது மனைவி எலிசபெத்தையும் பிரிந்து விட்டதாகவும், அவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் மலையாள ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பானது.
தமிழில் 'அன்பு' படம் மூலம் அறிமுகமான பாலா தொடர்ந்து 'காதல் கிசுகிசு', 'அம்மா அப்பா செல்லம்', 'கலிங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வீரம் படத்தில் அஜித்குமாரின் தம்பிகளில் ஒருவராக வந்தார்.
மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். பாலாவுக்கு 2016-ம் ஆண்டு பாடகி அம்ருதாவுடன் திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. பின்னர் டாக்டரான எலிசபெத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் எலிசபெத்தையும் பாலா பிரிந்து விட்டதாகவும், அவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் மலையாள ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பானது.
இதற்கு பாலா முகநூலில் நேரலையில் வந்து விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, ''இது நிஜமாகவே வேதனை அளிக்கிறது. திருமணம் ஒருமுறை தோல்வியுற்றால், அதை சிந்திக்காமல் இருக்கலாம். ஆனால் இரண்டாவது முறை தோல்வியுற்றால் யோசிக்க ஆரம்பிக்கிறோம். என்னை இந்த நிலைக்குத் தள்ளிய ஊடகங்களுக்கு நன்றி. நீங்கள் வற்புறுத்தினாலும் நான் எலிசபெத்திடம் பேசமாட்டேன். எலிசபெத் என்னை விட சிறந்தவர். தயவு செய்து அவருக்கு கொஞ்சம் நிம்மதி கொடுங்கள். நான் மாறிக்கொள்கிறேன். இது என் வாழ்வில் மிகவும் வேதனையான நாட்கள். நான் எனக்காக இப்போது பேச முயற்சிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.