ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'டியர்' படத்தின் புதிய அப்டேட்


ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் டியர் படத்தின் புதிய அப்டேட்
x

'டியர்' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 11-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த படத்துக்கு 'டியர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாக 'டியர்' உருவாகி உள்ளது. சமீபத்தில் இந்தபடத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. 'டியர்' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 11-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலான 'மஜா வெட்டிங்' என்ற பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏகாதசி எழுதியுள்ள இந்த பாடலை அந்தோணி தாசன் மற்றும் சிந்துரி விஷால் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story