ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'டியர்' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு


ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள டியர் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு
x

'டியர்' திரைப்படம் வருகிற 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'டியர்'. இந்த படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'டியர்' திரைப்படம் வருகிற 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'டியர்' படத்தின் டிரைலர் இன்று (ஏப்ரல் 5) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.


Next Story