அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்லும் கமல் படக்குழு...


அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்லும் கமல் படக்குழு...
x

'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

சென்னை,

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. 'தக் லைப்' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்நிலையில், 'தக் லைப்' (Thug Life) திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷியாவின் சைபீரியா பகுதியில் நடைபெறவுள்ளதாகவும் இதில் நடிகர் கமல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story