ராஷ்மிகாவுக்கு மீண்டும் எதிர்ப்பு


ராஷ்மிகாவுக்கு மீண்டும் எதிர்ப்பு
x

தென்னிந்திய படங்களை அவமதிக்கும் வகையில், இந்தி பாடல்களை உயர்வாக பேசுவதாக ராஷ்மிகாவை கண்டித்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்' படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி படங்களிலும் நடிக்கிறார்.

சமீபத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய 'காந்தாரா' படம் பற்றி சர்ச்சை கருத்து சொன்னதாக அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. கன்னட படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். இந்த நிலையில் தற்போது மீண்டும் பிரச்சினையில் சிக்கி உள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ராஷ்மிகா பேசும்போது, "தென்னிந்திய திரைப்படங்களில் மசாலா பாடல், குத்துப்பாடல் போன்ற ரகங்களில்தான் பாடல்கள் வருகின்றன. இந்தியில் தான் நல்ல மெலடியான காதல் பாடல்கள் வருகின்றன'' என்றார். ராஷ்மிகாவின் இந்த கருத்து சர்ச்சையாகியுள்ளது.

தென்னிந்திய படங்களை அவமதிக்கும் வகையில், இந்தி பாடல்களை உயர்வாக பேசுவதாக அவரை கண்டித்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது.


Next Story