'எங்களுடைய சோழ சிங்கம் கர்ஜிக்கிறது' - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ


எங்களுடைய சோழ சிங்கம் கர்ஜிக்கிறது - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ
x

நடிகர் விக்ரம் ஐந்து மொழிகளில் பின்னணி குரல் கொடுக்கும் சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன்' வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் சில காரணங்களால் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் படக்குழு ரசிகர்களுக்காக, சமூக வலைத்தளத்தில் நடிகர் விக்ரம் ஐந்து மொழிகளில் பின்னணி குரல் கொடுக்கும் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு 'எங்களுடைய சோழ சிங்கம் கர்ஜிக்கிறது' என்று பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story