ராம்சரணின் புதிய பட அறிவிப்பு


ராம்சரணின் புதிய பட அறிவிப்பு
x
தினத்தந்தி 25 March 2024 1:50 PM GMT (Updated: 25 March 2024 1:55 PM GMT)

இயக்குநர் சுகுமாரும், ராம்சரணும் புதிய படத்தில் இணைய உள்ள அறிவிப்பு அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.

இயக்குனர் எஸ். எஸ். ராஜமவுலியின் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ராம் சரண் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வந்த கேம் சேஞ்சர் திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து தேர்தல் முடிந்த பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. உப்பன்னா என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் புஜ்ஜி பாபு சனா ராம் சரணின் 16-வது திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக, ஜான்வி கபூர் நடிக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர் சுகுமார். நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளிவந்த ஆர்யா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தின் மூலமாகதான் அல்லு அர்ஜூனின் புகழ் உயர்ந்தது. அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021-ம் ஆண்டு வெளிவந்த புஷ்பா பாகம் 1 உலகளவில் மிகப்பெரிய வெற்றியை குவித்தது. 2021-ம் ஆண்டு இந்திய சினிமாவில் புஷ்பா திரைப்படம் அதிக வசூலினைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தெலுங்கு சினிமாவில் அதிக வசூல் செய்த படம் புஷ்பா திரைப்படம் தான்.

ராம் சரண், சமந்தா ,பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு போன்ற பல நடிகர்களின் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளிவந்த படம் ரங்கஸ்தலம். இப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

இந்நிலையில் சுகுமார் அடுத்ததாக ராம் சரணை வைத்து படம் இயக்கவுள்ளார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர். தேவி ஸ்ரீ இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படமானது ராம் சரணின் 17- வது படமாகும். #Raring2conquer என்ற தலைப்பில் படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு பிறகு சுகுமார், அல்லு அர்ஜூன் நடிக்கவிருக்கும் புஷ்பா பகுதி 2 படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என தெரிகிறது..


Next Story