சந்தானத்தின் புதிய படம்
கார்த்திக் யோகி டைரக்டு செய்யும் புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்க சந்தானம் தயாராகி உள்ளார்.
நகைச்சுவை நடிகரான சந்தானம் இப்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் 2021-ல் பாரீஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் வெளிவந்தன.
கடந்த வருடம் குளுகுளு, ஏஜெண்ட் கண்ணாயிரம் ஆகிய படங்கள் வந்தன. இந்த நிலையில் அடுத்து புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை கார்த்திக் யோகி டைரக்டு செய்கிறார். இவர்கள் கூட்டணியில் வந்த டிக்கிலோனா படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது புதிய படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
படத்துக்கு 'வடக்குப்பட்டி ராமசாமி' என்று பெயர் வைத்துள்ளனர். வி.ஸ்ரீ. நட்ராஜ் தயாரிக்கிறார். வடக்குப்பட்டி ராமசாமி என்பது நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடித்த கதாபாத்திரங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story