'ராஜபார்வை' இயக்குநரை புகழ்ந்த வைரமுத்து


ராஜபார்வை இயக்குநரை புகழ்ந்த வைரமுத்து
x
தினத்தந்தி 19 March 2024 12:47 PM GMT (Updated: 24 March 2024 11:32 AM GMT)

இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ்வை கௌரவிக்கும் பொருட்டு கமலின் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் 'அபூர்வ சிங்கீதம்' என்ற பெயரில் விழா எடுத்து கௌரவித்துள்ளார் கமல்.

கமல்ஹாசனின் ஆரம்பகாலத்தில் கே.பாலச்சந்தர் தான் அவரது குருவாக இருந்தார். அவரது வரிசையில் கமலின் கேரியரில் மிகப் பெரிய மாற்றம் கொடுத்தவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களை இயக்கியுள்ளார்

கமலின் 'பேசும் படம்' உட்பட பல பேசப்பட்ட படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். இவரை கௌரவிக்கும் பொருட்டு கமலின் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் 'அபூர்வ சிங்கீதம்' என்ற பெயரில் விழா எடுத்து கௌரவித்துள்ளார் கமல். சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் சிங்கீதம் இயக்கத்தில் கமல் நடித்த 'ராஜபார்வை', 'பேசும் படம்', 'அபூர்வ சகோதரர்கள்', 'மும்பை எக்ஸ்பிரஸ்' ஆகிய நான்கு படங்கள் தினம் ஒன்றாகத் திரையிடப்பட்டுவருகிறது.

இந்த விழாவில் கமல் தயாரிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. விழா நிகழ்வில் மணிரத்னம், சுஹாசினி, ஒய்.ஜி.மகேந்திரன், சஷிகாந்த், சித்தார்த், அன்பறிவ், வைரமுத்து, ராஜீவ்மேனன் என பலர் கலந்துகொண்டு 'ராஜபார்வை' படத்தை பார்த்து ரசித்தனர்.

கவிஞர் வைரமுத்து இயக்குநர் சங்கீதம் சீனிவாசராவை தனது பாணியில் புகழ்ந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story