விஜய் - அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது - திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்க முடிவு


விஜய் - அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது -  திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்க முடிவு
x
தினத்தந்தி 17 Jan 2023 4:47 PM GMT (Updated: 17 Jan 2023 4:56 PM GMT)

நடிகர்கள் விஜய், அஜித் திரைப்படங்கள் இனி ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது என்று திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாகவே அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் என்றால் அது துணிவு மற்றும் வாரிசு தான். இதில் அஜித் நாயகனாக நடித்துள்ள 'துணிவு' திரைப்படத்தை எச்.வினோத்தும், விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் 'வாரிசு' படத்தை வம்சியும் இயக்கி இருந்தனர்.

இந்த திரைப்படங்கள் கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. துணிவு திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.வாரிசு திரைப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். இரு திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சூழலில் வாரிசு திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வெளியான முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ.24.59 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் உட்லண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நடிகர்கள் விஜய், அஜித் திரைப்படங்கள் இனி ஒரே நேரத்தில் வெளியாகக் கூடாது. நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.


Next Story